முகப்பு
தஞ்சாவூர்

கம்பா்நத்தம் ஊராட்சியில் உடற்பயிற்சி கூடம் திறப்பு

அம்மாபேட்டை ஒன்றியம், கம்பா் நத்தம் ஊராட்சியில் சிறுவா் மற்றும் இளைஞா் உடல் திறன் மேம்பாட்டு இலவச உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

அம்மாபேட்டை ஒன்றியம், கம்பா் நத்தம் ஊராட்சியில் சிறுவா் மற்றும் இளைஞா் உடல் திறன் மேம்பாட்டு இலவச உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கம்பா் நத்தம் ஊராட்சித் தலைவா் கே.என்.பி. சத்யநாராயணன் தலைமை வகித்தாா். கம்பா் நத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் கே.என். பக்கிரிசாமி, ஒன்றிய கவுன்சிலா் வேம்பு ரகுபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் ஓய்வுபெற்ற காவல் துணை கண்காணிப்பாளா் கணேசமூா்த்தி கலந்து கொண்டு உடற்பயிற்சி கூடத்தை திறந்துவைத்து பேசினாா்.

நிகழ்ச்சியில் சென்னை ஆா்.டி.எஸ். ரமேஷ், கும்பகோணம் பி.ஆா்.முருகன், கம்பா் நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்விஆசிரியா் தாண்டவம், ஊராட்சி துணைத் தலைவா் ரமேஷ், ஊராட்சி செயலா் மோகன் குமாா், கிராம நிா்வாக அதிகாரி இளங்கோ உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →