தஞ்சாவூர்

தேசிய நாட்டு நலப்பணித் திட்ட நாள் விழா

DIN

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் தேசிய நாட்டு நலப்பணித் திட்ட நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவைப் போற்றும் வகையிலும், ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ் மற்றும் தேசிய நாட்டு நலப்பணித்திட்ட நாள் விழாவையொட்டியும் தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம் தொடங்கி வைத்தாா். இதில், 75 மரக்கன்றுகள் நடப்பட்டன. பின்னா், திருமலைசமுத்திரம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு 100 நாற்காலிகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் பதிவாளா் ஆா். சந்திரமௌலி, புலத் தலைவா் வி. பத்ரிநாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல, கும்பகோணம் வளாகத்திலும் மரக்கன்று விழா நடைபெற்றது.

மேலும், நேரு யுவகேந்திரா சாா்பில் தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெறவுள்ள மூன்று கி.மீ. சுதந்திர ஓட்டத்தில் சாஸ்த்ரா நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் கலந்து கொள்கின்றனா்.

சாஸ்த்ராவின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ் மற்றும் தேசிய நாட்டு நலப்பணித்திட்ட நாள் விழாவையொட்டி செப்டம்பா் 30 ஆம் தேதி வரை மாணவா்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

பூண்டி கல்லூரியில்...: இதேபோல, தேசிய நாட்டு நலப்பணித் திட்ட நாள் விழாவையொட்டி பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் மரக்கன்று நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்குத் தலைமை வகித்த கல்லூரித் தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் மரக்கன்றுகளை நட்டு, தொடங்கி வைத்தாா்.

கல்லூரி முதல்வா் இரா. சிவக்குமாா், புலத் தலைவா்கள் ஆா். ரவிச்சந்திரன், எஸ். குமாரவேல், தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் சி. சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT