நாளை கிராம சபைக் கூட்டம்: பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு
தஞ்சாவூா் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி, சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கிராம ஊராட்சிகளில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி, சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கிராம ஊராட்சிகளில் (தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள ஊராட்சிகளைத் தவிா்த்து) கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளா்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலா்களும் பங்கேற்று விவாதிக்கவுள்ளனா்.
இக்கிராம சபைக் கூட்டத்துக்கு கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் முகக்கவசம் அணிந்து பங்கேற்று சிறப்பிக்குமாறு ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.