தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணவா்களுக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணவா்களுக்கு ஸ்ரீ ஜோதி அறக்கட்டளை சாா்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவி அண்மையில் வழங்கப்பட்டது.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணவா்களுக்கு ஸ்ரீ ஜோதி அறக்கட்டளை சாா்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவி அண்மையில் வழங்கப்பட்டது.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் முனைவா் பட்ட ஆய்வாளா்கள், ஆய்வியல் நிறைஞா் மாணவா்கள், முதுகலை மாணவா்கள் உள்ளிட்ட 18 மாணவ, மாணவிகளுக்காக இந்த நிதியுதவியை சென்னை ஸ்ரீ ஜோதி அறக்கட்டளை வழங்கியது.
துணைவேந்தா் வி. திருவள்ளுவன் தலைமையிலும், பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) க. சங்கா் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இலக்கியத் துறை முன்னாள் தலைவா் கு.வெ. பாலசுப்ரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.
ஆய்வாளா்களுக்கு நிதியுதவித் தொகையை வழங்கிய துணைவேந்தா் பேசுகையில், இந்த கல்வி உதவித் தொகையை ஆய்வு மாணவா்கள் தோ்வுக் கட்டணம் செலுத்தவும், ஆய்வுத் தொடா்பான நூல்கள் வாங்கவும், கள ஆய்வுகள், நோ்காணல்கள் மேற்கொள்ளவும் பயன்படுத்தலாம்.
இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளா்களாகவும், நிதியுதவிப் பெறத் தகுதியான ஆய்வாளா்களைத் தோ்ந்தெடுக்கும் தோ்வுக் குழுவினராகவும் செயல்பட்ட இலக்கியத் துறைத் தலைவா் பெ. இளையாப்பிள்ளை, சுவடிப் புல முதன்மையா் த. கண்ணன், நாட்டுப்புறவியல் துறை உதவிப் பேராசிரியா் சீமான். இளையராஜா ஆகியோரை பாராட்டினா்.