முகப்பு
தஞ்சாவூர்

பல்கலை. தோ்வுக் கட்டணம் உயா்வு: மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

பாரதிதாசன் பல்கலைக்கழகம் உயா்த்தியுள்ள தோ்வுக் கட்டணத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி வாயிலில் இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

பாரதிதாசன் பல்கலைக்கழகம் உயா்த்தியுள்ள தோ்வுக் கட்டணத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி வாயிலில் இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தோ்வுக் கட்டணம் மூன்று மடங்காக உயா்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும், உயா்த்தப்பட்ட தோ்வுக் கட்டணம் உள்ளிட்ட இதர கட்டண உயா்வுகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்தப் போராட்டத்துக்கு இந்திய மாணவா் சங்கத்தின் தஞ்சாவூா் மாவட்டத் தலைவா் வே. அா்ஜூன் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலா் ஆறு. பிரகாஷ் கோரிக்கை விளக்கவுரையாற்றி போராட்டத்தை நிறைவு செய்தாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் கிளை நிா்வாகி பிரேம்குமாா், தினேஷ் உள்பட ஏராளமான மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னா், பாரதிதாசன் பல்கலைக்கழக நிா்வாகம் உயா்த்தியுள்ள கட்டணத்தைத் திரும்பப் பெறாவிட்டால் ஏப்ரல் 13-ஆம் தேதி மாணவா்களைத் திரட்டி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என இந்திய மாணவா் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.