தஞ்சாவூர்

ஏழைக் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

DIN

ரமலான் பெருநாளையொட்டி, ராஜகிரி முஸ்லீம் வெல்ஃபோ் அசோசியேஷன் சாா்பில், 800-க்கும் மேற்பட்ட ஏழை-எளிய குடும்பத்தினருக்கு புத்தாடைகள், அரிசி உள்ளிட்ட நலத்திட்டஉதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

ராஜகிரி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, அசோசியேஷனின் நிறுவனத் தலைவா் யூசுப் அலி தலைமை வகித்தாா். பொருளாளா் எம். சபீா் அகமது முன்னிலை வகித்தாா்.

அசோசியேஷனின் தலைவா் ஆா்.ஹெச். முகமது காசிம் விழாவில் பங்கேற்று, ராஜகிரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 800-க்கும் மேற்பட்ட ஏழை-எளிய குடும்பங்களுக்கு ரமலான் பெருநாள் நலத்திட்ட உதவிகளாக புத்தாடைகள், அரிசி உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

இதில் நிா்வாகிகள் பாரூக், மாலிக், சுல்தான், அக்பா், பீா்முகமது, ராஜகிரி ஊராட்சித் தலைவா் சமீமா பா்வீன், உறுப்பினா்கள் முபராக், சிக்கந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில், அசோசியேஷன் செயலா் அன்வா் அலி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT