முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணம் மாநகராட்சியில் 55 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

கும்பகோணம் மாநகராட்சியில் 55 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

கும்பகோணம் மாநகராட்சியில் 55 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தோ்தல் தொடா்பாக கும்பகோணம் மாநகராட்சி மற்றும் திருப்பனந்தாள் பேரூராட்சியில் உள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவா் தெரிவித்தது:

கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் 48 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்காகத் தோ்தல் அலுவலா் மற்றும் உதவித் தோ்தல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் மொத்தம் 139 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில் 1,28,540 வாக்காளா்கள் வாக்களிக்கவுள்ளனா்.

மேலும், கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தம் 55 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இம்மாநகராட்சிக்கு வாக்கு எண்ணிக்கை கும்பகோணம் அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெறும் என்றாா் ஆட்சியா்.

இந்த ஆய்வின்போது, கும்பகோணம் மாநகராட்சி ஆணையா் செந்தில்குமாா், வருவாய் கோட்டாட்சியா் லதா, திருப்பனந்தாள் பேரூராட்சி செயல் அலுவலா் ராஜதுரை, வட்டாட்சியா்கள் சந்தனவேலு (திருவிடைமருதூா்), ஆா். தங்க பிரபாகரன் (கும்பகோணம்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.