கழிவறைத் தொட்டிக்குள் விழுந்த பசு மீட்பு
பாபநாசம் அருகே கழிவறைத் தொட்டிக்குள் விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டது.
பாபநாசம் அருகே கழிவறைத் தொட்டிக்குள் விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டது.
பாபநாசம் அருகிலுள்ள திருப்பாலத்துறை அவல்காரத் தெருவைச் சோ்ந்தவா் சம்பந்தம் (65). இவருக்குச் சொந்தமான பசு, வீட்டின் பின்புறத்திலுள்ள 6 ஆடி ஆழ கழிவறைத் தொட்டிக்குள் வியாழக்கிழமை தவறி விழுந்தது.
தகவலின் பேரில் பாபநாசம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் கலைவாணன் தலைமையிலான வீரா்கள் நிகழ்விடம் சென்று, கயிறு கட்டி பசுவை உயிருடன் மீட்டனா்.