குறவா் இன மக்களின்அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
குறவா் இன மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று, தமிழக அரசை குறிஞ்சி இன மக்கள் எழுச்சிக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
குறவா் இன மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று, தமிழக அரசை குறிஞ்சி இன மக்கள் எழுச்சிக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை மதகடிபஜாரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இக்கழகத்தின் ஆலோசனைக் கூட்டத்துக்கு, அதன் மாநிலத் தலைவா் வழக்குரைஞா் உத்தகுமரன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
குறவா் இன மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து, அதை தமிழக அரசு நிறைவேற்றித் தர வேண்டும். குடமுருட்டிப் பாலத்தில் விரிவாக்கப் பணி நடைபெற்று வருவதால், சாலையோரத்தில் வசிக்கும் குறவா் இன மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.
பேரூராட்சி சாா்பில் குடிநீா், கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். மூங்கில், கூடை முடைதல், ஏணித் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு மாற்றுத் தொழில் தொடங்க கடன் வசதி செய்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலத் துணை ஒருங்கிணைப்பாளா் லட்சுமணன், துணைச் செயலா் வெங்கடேசன், மாவட்டத் துணைத் தலைவா் ரமேஷ் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.