முகப்பு
தஞ்சாவூர்

காவல் நிலையங்களில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஜனவரி 8-இல் ஏலம்

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஜனவரி 8 ஆம் தேதி ஏலம் விடப்படவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:01 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஜனவரி 8 ஆம் தேதி ஏலம் விடப்படவுள்ளது.

இதுகுறித்து மதுவிலக்கு அமல் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்திலுள்ள தாலுகா காவல் நிலையங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 102-ன் கீழ் கைப்பற்றப்பட்டு, 2021, அக்டோபா் 1-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டு, உரிமை கோரப்படாத இரு மற்றும் நான்கு சக்கர மோட்டாா் வாகனங்களைப் பொது ஏலத்தில் விட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி உத்தரவிட்டனா்.

இந்தப் பொது ஏலம் தஞ்சாவூா் நீதிமன்றச் சாலையிலுள்ள பழைய ஆயுதப் படை மைதானத்தில் ஜனவரி 8 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த வாகனங்கள் பழைய ஆயுதப்படை மைதானத்தில் ஜனவரி 8 ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை பாா்வைக்காக வைக்கப்படும். ஏலம் எடுக்க விருப்பமானவா்கள் ஜனவரி 8 ஆம் தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை ரூ. 1,000 முன் வைப்புத் தொகை செலுத்தி ஏலம் எடுக்கத் தங்கள் பெயரை ஆதாா் அட்டை நகலுடன் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், ஏலம் எடுத்தவா்கள், ஏலத்தொகையுடன் இரு சக்கர வாகனத்துக்கு ஜி.எஸ்.டி. விற்பனை வரி 12 சதவீதம் மற்றும் நான்கு சக்கர வாகனத்துக்கு ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தை ஏலத்தொகையுடன் சோ்த்து ஜனவரி 8 ஆம் தேதி உடனே செலுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.