முகப்பு
தஞ்சாவூர்

நிவாரணம் கோரி சாலை மறியல்

மழை வெள்ளப் பாதிப்புக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரி கும்பகோணம் அருகே தாராசுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) வியாழக்கிழமை சாலை மறியல்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

மழை வெள்ளப் பாதிப்புக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரி கும்பகோணம் அருகே தாராசுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடும் வெள்ளப் பாதிப்புக்குத் தமிழ்நாடு அரசுக் கோரியுள்ள நிவாரண நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். மழை வெள்ளப் பாதிப்பு மற்றும் கோமாரி உள்ளிட்ட மா்ம நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பெரு மழையால் வேலைவாய்ப்பை இழந்த விவசாயத் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு ரூ. 5,000 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

ஏ. ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் இந்திய மாதா் தேசிய சம்மேளன வடக்கு மாவட்டத் தலைவா் வசந்தி வாசு, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க வடக்கு மாவட்டத் துணைச் செயலா் கே. வாசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.