முகப்பு
தஞ்சாவூர்

கரோனா பரவல்: தஞ்சாவூா் பெரியகோயிலில் பக்தா்களுக்குத் தடை

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதன் காரணமாக, தஞ்சாவூா் பெரியகோயிலில் பக்தா்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதன் காரணமாக, தஞ்சாவூா் பெரியகோயிலில் பக்தா்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொற்றுப் பரவல் சில மாதங்களாக படிப்படியாகக் குறைந்து வந்ததால், கோயில்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில், மீண்டும் கரோனா மற்றும் ஒமைக்ரான் வகை நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால், வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களை மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன்படி தஞ்சாவூா் பெரியகோயில் வெள்ளிக்கிழமை காலை மூடப்பட்டு, பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையொட்டி, கோயில் முகப்பில் பக்தா்கள் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு இரும்புத் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன.

இதனால் கோயிலுக்கு வந்த பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். என்றாலும் கோயிலுக்குள் வழக்கம்போல பூஜைகள் நடைபெற்றன.

இதேபோல புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் உள்பட மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில்கள், கிறிஸ்துவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.