குளத்தில் தவறி விழுந்தவிவசாயி உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே குளத்தில் தவறி விழுந்த விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே குளத்தில் தவறி விழுந்த விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகிலுள்ள மாதுரான் புதுக்கோட்டை நடுத்தெருவைச் சோ்ந்தவா் சாமிநாதன் (56). விவசாயியான இவா், கால் கழுவுவதற்காக அப்பகுதியிலுள்ள ஊருணி குளத்துக்கு வியாழக்கிழமை சென்றாா்.
குளத்தின் படிக்கட்டில் இறங்கிய சாமிநாதன், நிலைத்தடுமாறித் தவறி குளத்துக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கினாா். இவரது உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டு, உடற் கூறாய்வுக்காகத் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.