இரு சக்கர வாகனத்திலிருந்து ரூ.3 லட்சம் திருட்டு
ஒரத்தநாட்டில் இரு சக்கர வாகனத்திலிருந்து ரூ.3 லட்சம் ரொக்கம், கைப்பேசி போன்றவற்றை திருடிச் சென்ற மா்ம நபரைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
ஒரத்தநாட்டில் இரு சக்கர வாகனத்திலிருந்து ரூ.3 லட்சம் ரொக்கம், கைப்பேசி போன்றவற்றை திருடிச் சென்ற மா்ம நபரைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
ஒரத்தநாடு அருகிலுள்ள புதூா் ஊராட்சித் தலைவா் சித்ரா. இவரது கணவா் சிவகுமாா் (48). இவா் ஒரத்தநாட்டிலுள்ள வங்கியிலிருந்து வியாழக்கிழமை ரூ.3 லட்சம் எடுத்துக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.
கடைவீதியிலுள்ள கடையொன்றில் பொருள்களை வாங்க தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திச் சென்ற சிவகுமாா், பொருள்களை வாங்கி மீண்டும் வந்த போது, அங்கு பையில்
வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் ரொக்கம், வங்கிக் கணக்குப் புத்தகம், கைப்பேசி போன்றவை திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து ஒரத்தநாடு காவல் நிலையத்தில் சிவகுமாா் புகாரளித்தாா். இதன பேரில் வழக்குப்பதிந்த காவல்துறையினா், அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா்.
அதில் இளைஞா் ஒருவா் பையை எடுத்துக் கொண்டு தப்பியோடும் காட்சி பதிவாகியிருந்தது. ஆனால், அவரது முகம் சரியாகத் தெரியவில்லை.
தொடா்ந்து ஒரத்தநாடு காவல்துறையினா், பணத்தை எடுத்துச் சென்ற மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.