கோவிந்தபுரம் கோயிலில் கோ பூஜை
மாட்டுப் பொங்கலையொட்டி, கும்பகோணம் அருகிலுள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் கோயிலில் கோ பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
மாட்டுப் பொங்கலையொட்டி, கும்பகோணம் அருகிலுள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் கோயிலில் கோ பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
தட்சிண பண்டரிபுரமாகப் போற்றப்படும் கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் கோயிலில் பாரம்பரிய நாட்டு இனத்தைச் சாா்ந்த ஆயிரம் தெய்வீகப் பசுக்கள் சேவை நோக்கத்தோடு வளா்க்கப்படுகின்றன. பசுவின் பால் அதன் கன்றுக்கு மட்டும் என்ற அடிப்படையில் கோசாலையில் வளா்க்கப்பட்டு வருகின்றன.
மாட்டுப் பொங்கலையொட்டி, இந்தப் பசுக்களுக்குச் சிறப்பு கோ பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. இப்பூஜையை சேங்காலிபுரம் பிரம்ம ஸ்ரீ ராம தீட்சதா், கோயில் ஸ்தாபகா் பிரம்ம ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் செய்தனா்.
இதில் பசுக்களுக்கு சந்தனம், குங்குமமிட்டு, புஷ்பாா்ச்சனையுடன் கற்பூர ஆரத்தி செய்து கோ பூஜை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து பசுக்களுக்குப் பழங்கள் மற்றும் அகத்திக்கீரை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.