முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தஞ்சாவூரில் குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

தஞ்சாவூரில் குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை வள்ளலாா் நகரில் சில நாள்களாகக் குடிநீா் வரவில்லை. இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதியைச் சோ்ந்த 20-க்கும் அதிகமான பெண்கள் மற்றும் ஆண்கள் காலி குடங்களுடன் மருத்துவக் கல்லூரி முதன்மைச் சாலையில் வியாழக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குடிநீா் கிடைக்க அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் உறுதியளித்ததைத் தொடா்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.