தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையப் பகுதியில் மறியல் செய்த ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா். 
தஞ்சாவூர்

மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் மறியல்

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

DIN

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதில், தில்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மத்திய அரசு துரோகம் செய்துவிட்டதாகவும், விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயா்த்தி அறிவிக்கக் கோரியும், தில்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியலுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி. நடராஜன் தலைமை வகித்தாா். ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளா் என்.வி. கண்ணன், நிா்வாகிகள் பி. செந்தில்குமாா், வீர. மோகன், காளியப்பன், கோ. திருநாவுக்கரசு, கே. அபிமன்னன், இ. வசந்தி, ஆா். கலைச்செல்வி, நா. குருசாமி, எம். வடிவேலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதுதொடா்பாக 2 பெண்கள் உள்பட ஏறத்தாழ 40 போ் கைது செய்யப்பட்டனா்.

இதேபோல பேராவூரணி, பட்டுக்கோட்டை, பூதலூா் உள்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற மறியலில் ஏராளமானோா் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT