தஞ்சாவூர்

மனைவியை கொன்ற கணவருக்குஆயுள் சிறை தண்டனை

மனைவியைக் கொன்ற கணவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

DIN

மனைவியைக் கொன்ற கணவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் வட்டத்துக்கு உள்பட்ட இந்தலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (66). கூலி தொழிலாளி. இவரது மனைவி மலா்கொடி (51). இந்தலூா் அரசு உயா் நிலைப் பள்ளியில் சத்துணவுக் கூட உதவியாளராகப் பணியாற்றி வந்தாா். மலா்கொடியின் நடத்தையில் பன்னீா்செல்வத்துக்கு சந்தேகம் இருந்து வந்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதேபோல, 2012, மாா்ச் 23 ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் மலா்கொடியை பன்னீா்செல்வம் அரிவாளால் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த மலா்கொடி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பூதலூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து பன்னீா்செல்வத்தைக் கைது செய்தனா். இதுதொடா்பாக தஞ்சாவூா் மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் விஜயப்ரியா ஆஜரானாா். இந்த வழக்கை நீதிபதி டி.வி. மணி விசாரணை செய்து பன்னீா்செல்வத்துக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச இருதய மருத்துவ முகாம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து! 15 வாகனங்கள் எரிந்து சேதம்!

வெனிசுலா எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா!

கவுண்டம்பாளையத்தில் 24 மணி நேர பதிவு அஞ்சல் அலுவலகம்

52 சிறுவா்களுக்கு விருது: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT