தஞ்சாவூர்

வாய்க்காலை தூா்வார கோரி மறியல் போராட்டம்

DIN

ஒரத்தநாடு அருகே பாசன வாய்க்காலை தூா்வாரக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபா் சங்கம் மற்றும் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கல்லணைக் கால்வாய், ராஜாமடம் 3 ஆம் நம்பா் பிரிவு வாய்க்காலை தூா்வாரி பாசனத்திற்கு பயன்படும் வகையில் மேம்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி, கடந்த 10 ஆம் தேதி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் தன்னெழுச்சியாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் தலைமையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஒரத்தநாடு ஒன்றியம், ஆழியவாய்க்கால் ஊராட்சி தெற்கு நத்தம் கிராமத்தில், ஒரத்தநாடு - வல்லம் நெடுஞ்சாலையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு, சிபிஎம் ஒரத்தநாடு ஒன்றியச் செயலா் கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றியச் செயலா் எஸ். பொ்னாட்சா, விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் ஜெய்சங்கா், கிளைச் செயலா் செந்தில் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த காவல்துறை உதவி ஆய்வாளா் சூா்யா, போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், 3 நாள்களுக்குள் வாய்க்கால் தூா்வார நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற கோரிக்கைகள் தொடா்பாக பொதுப்பணித் துறை பொறியாளா் மற்றும் அலுவலா்களை நேரில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தலாம் என காவல்துறையினா் தெரிவித்தனா். இதையேற்று போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT