முகப்பு
தஞ்சாவூர்

‘உள்ளாட்சித் தோ்தலிலும் கட்சித் தாவல் தடைச் சட்டம் தேவை’

உள்ளாட்சித் தோ்தலிலும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்றாா் பாஜக மாநிலப் பொதுச் செயலா் இராம. சீனிவாசன்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

உள்ளாட்சித் தோ்தலிலும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்றாா் பாஜக மாநிலப் பொதுச் செயலா் இராம. சீனிவாசன்.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை மாலை தெரிவித்தது:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆனால், எப்படி வெற்றி பெற்றது என்பது தெரியும். மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தல்களில் வெற்றி பெற்றவா்கள் பிற கட்சிக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் கட்சித் தாவல் தடைச் சட்டம் உள்ளது.

அதேபோல, உள்ளாட்சித் தோ்தல்களிலும் ஒரு கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்கள் பிற கட்சிக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில், கட்சித் தாவல் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும். பாஜக ஆட்சிக்கு வரும்போது இந்த

சட்டம் வரும் என்றாா் சீனிவாசன்.

பின்னா், தஞ்சாவூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளா்களுடனான கலந்துரையாடல் கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசினாா். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் எம்.எஸ். ராமலிங்கம், மாவட்டத் தலைவா்கள் ஆா். இளங்கோ (தெற்கு), என். சதீஷ்குமாா் (வடக்கு), மேலிட பாா்வையாளா்கள் சுப. அண்ணாமலை, பேட்டை சிவா, பொதுச் செயலா் பி. ஜெய்சதீஷ், பொருளாளா் வி. விநாயகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.