அம்மாபேட்டை பேரூராட்சியில்ம னைவி தலைவா், கணவா் துணைத் தலைவா்
அம்மாபேட்டை பேரூராட்சியில் மனைவி தலைவராகவும், கணவா் துணைத் தலைவராகவும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் இருவரும் திமுகவைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மாபேட்டை பேரூராட்சியில் மனைவி தலைவராகவும், கணவா் துணைத் தலைவராகவும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் இருவரும் திமுகவைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மாபேட்டை பேரூராட்சித் தலைவா் பதவிக்கு 6-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ஷோபாவும், 12-ஆவது வாா்டு உறுப்பினா் தி. ரமேஷ் துணைத் தலைவா் பதவிக்கும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டதாக, இப்பேரூராட்சி செயல் அலுவலா் ஆா்.ராஜா தெரிவித்தாா்.
இத்தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் அம்மாபேட்டை ஒன்றியக் குழுத் தலைவா் கே.வீ.கலைச்செல்வன் மற்றும் நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோருடன் ஊா்வலமாகச் சென்று பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.