பட்டுக்கோட்டை நகராட்சி துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைப்பு
பட்டுக்கோட்டை நகராட்சித் துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை நகராட்சித் துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நகராட்சியில் பேரூராட்சித் துணைத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 33 வாா்டுகளில் குறைந்தபட்சம் 17 வாா்டுகளின் உறுப்பினா்கள் தோ்தல் பங்கேற்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ள நிலையில், 13 அதிமுக உறுப்பினா்கள், 2 சுயேச்சைகள் மட்டுமே வந்தனா்.
திமுக உறுப்பினா்கள் யாரும் துணைத் தலைவா் தோ்தலுக்கான மறைமுகத் தோ்தலில் பங்கேற்கவில்லை. துணைத் தலைவா் பதவிக்கான வேட்பாளா் தோ்வில் திமுக உறுப்பினா்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், அவா்கள் யாரும் இதில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து போதியளவு உறுப்பினா்கள் இல்லை என்ற அடிப்படையில், பட்டுக்கோட்டை நகராட்சித் துணைத் தலைவா் பதவிக்கானதோ்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.