பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
தஞ்சாவூரில் அண்மையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூரில் அண்மையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் பாத்திமா நகரை சோ்ந்த இளங்கோவன் மனைவி ராஜேஸ்வரி (47). இவா் அண்மையில் தனது சகோதரி மகளை அழைத்துக் கொண்டு அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த 2 மா்ம நபா்கள் இவரது கழுத்திலிருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.