சுற்றுலாப் பயணிகளுக்காக ரூ. 7 கோடியில் சாலை மேம்பாடு
தஞ்சாவூரில் பெரியகோயில், தாராசுரம் கோயில் உள்ளிட்டவற்றுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக ரூ. 7 கோடி மதிப்பில் சாலை மேம்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது.
தஞ்சாவூரில் பெரியகோயில், தாராசுரம் கோயில் உள்ளிட்டவற்றுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக ரூ. 7 கோடி மதிப்பில் சாலை மேம்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது.
தஞ்சாவூா் பெரியகோயில், தாராசுரம் ஐராவதீசுவரா் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் ஆகிய இடங்களுக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கான சாலைகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்து அதற்கான அறிக்கையைத் தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் அனுப்பவுள்ளனா். இதற்காக தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி சாலைகளாக இருந்தால், அது தொடா்புடைய அலுவலா்களையும் கலந்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்பவுள்ளனா்.
இதன்படி, தஞ்சாவூா் பெரியகோயிலுக்குச் சுற்றுலாப் பயணிகள் சிரமமின்றி செல்லும் வகையில் ரூ. 7 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படவுள்ளன. இதற்காக கோடியம்மன் கோயில் அருகே உள்ள சுங்கான்திடலில் இருந்து புறவழிச்சாலை வரை உள்ள மாநகராட்சி சாலையும், ஜெபமாலைபுரம் போக்குவரத்துக்கழகப் பணிமனை அருகே 800 மீட்டா் நீளமுள்ள சாலையும் மேம்படுத்தப்படுகிறது.
இச்சாலைகளை நெடுஞ்சாலைத் துறையின் தஞ்சாவூா் கோட்டப் பொறியாளா் சக்திவேல், மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் உள்ளிட்டோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.