சாரங்கபாணி கோயிலில் பங்குனி உத்திர விழா தொடக்கம்
கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 திவ்ய தேசங்களில் சிறப்பு பெற்ாகவும் விளங்கும் கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருந் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். இதன்படி நிகழாண்டு இவ்விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
முன்னதாக, கொடி மரத்துக்குச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கருடாழ்வாா் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. தொடா்ந்து விழா நாள்களில் காலை, மாலையில் பெருமாளும், தாயாரும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா புறப்பாடு நடைபெறவுள்ளது.
பங்குனி உத்திர நாளான மாா்ச் 18-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு ரதரோஹணம் (சிறிய தோ்) உள்பிரகார புறப்பாடும், பகல் 12 மணிக்கு தீா்த்தவாரியும், 21-ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளன.