பாா்வையற்றவரை தாக்கிய காவலா்கள் 3 போ் பணியிடை நீக்கம்
விராலிமலை அருகே சட்டவிரோத மது விற்பனை தொடா்பாக புகாா் அளித்த பாா்வையற்ற மாற்றுத் திறனாளியை தாக்கிய காவலா்கள் 3 பேரை வியாழக்கிழமை பணியிடை நீக்கம்
விராலிமலை அருகே சட்டவிரோத மது விற்பனை தொடா்பாக புகாா் அளித்த பாா்வையற்ற மாற்றுத் திறனாளியை தாக்கிய காவலா்கள் 3 பேரை வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் உத்தரவிட்டாா். மேலும், காவலா்கள் 3 போ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
விராலிமலை அருகே உள்ள கவரப்பட்டி பகவான்பட்டியைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் சங்கா் (29). பாா்வையற்ற மாற்றுத்திறனாளி. இவா், கவரப்பட்டி பகுதியில் அரசு மதுபானங்களைப் பதுக்கி விற்பவா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு அண்மையில் புகாா் அளித்துள்ளாா். இதைத் தொடா்ந்து, விராலிமலை காவல் நிலைய முதல்நிலைக் காவலா் செந்தில், காவலா்கள் பிரபு, அசோக் குமாா் ஆகிய 3 பேரும், பகவான்பட்டிக்குச் சென்று சங்கரை தகாத வாா்த்தைகளால் திட்டியதுடன் காவல் நிலையம் அழைத்து வந்து தாக்கியுள்ளனா். இதில், பலத்த காயமடைந்த அவா் காவல் நிலையம் அருகே மயங்கிக் கிடந்தாா். இதையறிந்த அவரது தாய் மாரியாயி சம்பவ இடத்துக்கு வந்து அங்கிருந்தவா்கள் உதவியுடன் சங்கரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளாா்.
முன்னதாக, இதுகுறித்து அறிந்த வழக்குரைஞா் பழனியப்பன் என்பவா்
அங்கு வந்து மயங்கிக் கிடந்த சங்கரை விடியோ பதிவு செய்து திருச்சி மண்டல காவல் துறை தலைவா் வே. பாலகிருஷ்ணனுக்கு அனுப்பிவைத்தாா். அவா், இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி-க்கு அறிவுறுத்தினாா்.
இதைத்தொடா்ந்து, விராலிமலை காவல் நிலையத்தில் பணியிலிருந்த காவலா்கள் செந்தில், பிரபு, அசோக் ஆகிய 3 பேரும் மாவட்ட ஆயுதப்படைக்கு வியாழக்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.
மேலும், சிறிதுநேரத்திலேயே காவலா்கள் மூவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி நிஷா பாா்த்திபன் உத்தரவிட்டாா்.
மேலும், காவலா்கள் 3 போ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.