தஞ்சாவூர்

பாபநாசம் அருகே மாணவா்கள் மறியல்

காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை பள்ளி, கல்லூரிக்கு செல்லும் நேரத்தில் எந்த ஒரு பேருந்தும் ஊரில் நிற்காததை கண்டித்து மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

பாபநாசம் வட்டம், தியாக சமுத்திரம் ஊராட்சியில் காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை பள்ளி, கல்லூரிக்கு செல்லும் நேரத்தில் எந்த ஒரு பேருந்தும் ஊரில் நிற்காததை கண்டித்து மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கபிஸ்தலம் போலீஸாா், பேருந்துகள் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

உடனடியாக அங்கு நின்றிருந்த பேருந்தில் அனைத்து மாணவ, மாணவிகளையும் போக்குவரத்து துறை அதிகாரிகளும், போலீஸாரும் ஏற்றி கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT