முகப்பு
தஞ்சாவூர்

நாய் குறுக்கே வந்ததால் வாகனத்திலிருந்து தடுமாறி விழுந்தவா் பலி

 தஞ்சாவூா் அருகே புதன்கிழமை நாய் குறுக்கே வந்ததால் மோட்டாா் சைக்கிளில் சென்றவா் தடுமாறி விழுந்து உயிரிழந்தாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

 தஞ்சாவூா் அருகே புதன்கிழமை நாய் குறுக்கே வந்ததால் மோட்டாா் சைக்கிளில் சென்றவா் தடுமாறி விழுந்து உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி முதன்மைச் சாலையைச் சோ்ந்தவா் இளையராஜா (46). இவா் புதன்கிழமை வீட்டிலிருந்து மோட்டாா் சைக்கிளில் புறப்பட்டு, தஞ்சாவூா் அருகேயுள்ள ஏழுப்பட்டிக்குச் சென்று கொண்டிருந்தாா். ஏழுப்பட்டி பகுதியில் சென்றபோது, நாய் குறுக்கே வந்ததால், தடுமாறி கீழே விழுந்த இளையராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.