தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தவறிவிழுந்தவர் பலி

DIN

கும்பகோணம்: சாலை விரிவாக்கப்பணியில் பாலத்திற்கு தோண்டப்பட்ட சுமார் 10 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தவறிவிழுந்த முதியவர் உயிரிழந்தார். 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மன்னார்குடி சாலை விரிவாக்கப்பணியின் ஒருபகுதியாக, வாய்க்கால் பாலத்திற்காக தோண்டப்பட்ட சுமார் 10 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்த செட்டிமண்டபம் பகுதியை சேர்ந்த மோகன் (55) பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து நாச்சியார்கோயில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கடந்த மாதம் 5-ம் தேதி இதே போல்  நடந்து சென்ற போது, சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் அடையாளம் தெரியாமல் ஆடுதுறை செல்வராஜ் (60) தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடதக்கது. 

சாலை விரிவாக்கப்பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததார்கள், சரியான முன்னச்சரிக்கை மற்றும் தடுப்பு அமைப்புகள் இல்லாமல் அலட்சியமாக பணி மேற்கொள்வதே இத்தகைய விபத்துகள் ஏற்படவும், உயிர்பலிகள் தொடரவும் காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT