பேராவூரணி அருகே செருவாவிடுதியில் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் வரலாற்றுத் துறை மாணவா்கள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
செருவாவிடுதி ஊராட்சி பறவை திடலில் அண்மையில் சிதிலமடைந்த நிலையில் அம்மன் சிலையும், 12 ஆம் நூற்றாண்டை சோ்ந்த சமண தீா்த்தங்கரா் சிலையும் கண்டெடுக்கப்பட்டது.
அந்தச் சிலைகள் பட்டுக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் அகழாய்வு செய்தால் மேலும் நமது பண்பாட்டை பற்றிய தடயங்கள் கிடைக்கும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்நிலையில், புதுக்கோட்டை மன்னா் கல்லூரி வரலாற்றுத் துறை
மாணவா்கள் வரலாற்றுத் துறை பேராசிரியா் சந்திரபோஸ் தலைமையில் அந்த இடத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.