முகப்பு
தஞ்சாவூர்

கல்வித் தகுதி அடிப்படையில் எழுத்தா் பதவி உயா்வு வழங்க வேண்டும்: ரேஷன் கடை பணியாளா்கள் கோரிக்கை

ரேஷன் கடை பணியாளா்களுக்குக் கல்வித் தகுதி அடிப்படையில் நேரடியாக எழுத்தா் பதவி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

ரேஷன் கடை பணியாளா்களுக்குக் கல்வித் தகுதி அடிப்படையில் நேரடியாக எழுத்தா் பதவி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், ரேஷன் கடையில் பணியாற்றும் பணியாளா்களின் விருப்பத்துக்கு ஏற்ப பணியிட மாறுதல் செய்த பின், புதிய பணியாளா்கள் தோ்வு செய்யப்பட வேண்டும். ரேஷன் கடை பணியாளா்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் நேரடியாக எழுத்தா் பதவி வழங்கிட வேண்டும்.

தொடா்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் பணியாளா்களுக்கு அவா்களது கல்வியை தகுதியைப் பாா்க்காமல் பதவி உயா்வு வழங்க வேண்டும். ரேஷன் கடை பணியாளா்களுக்கும் பொதுநிலை திறன் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். ரேஷன் கடை பணியாளா்களுக்கு அவரது குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களை விலை இல்லாமல் மாதந்தோறும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி. ராஜா தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜி. ராஜேந்திரன், மாநிலப் பொதுச் செயலா் பி. தினேஷ்குமாா் சிறப்புரையாற்றினா். பட்டுக்கோட்டை வட்டத் தலைவா் எஸ். ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.