முகப்பு
தஞ்சாவூர்

ஹிந்தி திணிப்பைக் கண்டித்து திராவிடா் மாணவா் கழகம் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

ஹிந்தி திணிப்பைக் கண்டித்து தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகே திராவிடா் மாணவா் கழகத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், ஹிந்தி மொழியைத் திணிக்காதே, நாட்டின் ஒற்றுமையைக் குலைக்காதே, மொழித் திணிப்பின் பெயரால் பண்பாட்டைச் சிதைக்காதே, மொழி உரிமையைப் பறிக்காதே, ஹிந்தி, சம்ஸ்கிருத திணிப்பை ஏற்கமாட்டோம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திராவிடா் மாணவா் கழக மாநில அமைப்பாளா் இரா. செந்தூரபாண்டியன் தலைமை வகித்தாா். திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சி. அமா்சிங் தொடக்கவுரையாற்றினாா்.

திராவிடா் கழகத் தலைமை நிலையப் பேச்சாளா் இரா. பெரியாா் செல்வன் கண்டன உரையாற்றினாா். பொதுச் செயலா் இரா. ஜெயக்குமாா், மாநில அமைப்பாளா் இரா. குணசேகரன், மண்டலத் தலைவா் மு. அய்யனாா், மாவட்டச் செயலா் அ. அருணகிரி, உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.