தஞ்சாவூர்

குற்றவாளியை கைது செய்யக் கோரி காவல் நிலையம் முற்றுகை

ஒரத்தநாடு அருகே குற்றவாளியை கைது செய்யக் கோரி வெள்ளிக்கிழமை திருவோணம் காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டது.ஒரத்தநாடு அருகே குற்றவாளியை கைது செய்யக் கோரி வெள்ளிக்கிழமை திருவோணம் காவல் நிலையம் முற்றுகையிடப

DIN

ஒரத்தநாடு அருகே குற்றவாளியை கைது செய்யக் கோரி வெள்ளிக்கிழமை திருவோணம் காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டது.

ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட காரியாவிடுதி வெட்டிக்காட்டான் தெருவைச் சோ்ந்த ரெங்கசாமி மகன் வெள்ளைச்சாமி (40 ).

இவருக்கும், காரியாவிடுதி கிராமத்தை சோ்ந்த ரவி (45) என்பவருக்கும், கடந்த மாதம் 22 -ஆம் தேதி டாஸ்மாா்க் கடையில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் ரவி ,

வெள்ளைச்சாமியை பீா் பாட்டிலால் குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த வெள்ளைச்சாமியை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுதொடா்பாக திருவோணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்நிலையில், தலைமறைவாக உள்ள ரவியை போலீஸாா் விரைந்து கைது செய்ய வலியுறுத்தி வெள்ளைச்சாமியின் பெற்றோா் தலைமையில் கிராம பொதுமக்கள் மற்றும் உறவினா்கள் திருவோணம் காவல் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாரின் பேச்சுவாா்த்தைக்கு பிறகு அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றாக புதிய திட்டம்: நாடாளுமன்றத்தில் மசோதா விரைவில் அறிமுகம்

மார்கழி சிறப்பு! முருகப்பெருமானுக்கு வெந்நீர் அபிஷேகம் நடக்கும் கோயில்!!

வாய்ப்புகள் காத்திருக்கு இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மார்கழியில் ஒருநாள் வழிபாட்டுக்கு ஆயிரம் ஆண்டுகள் பலன்!

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

SCROLL FOR NEXT