முகப்பு
தஞ்சாவூர்

தமிழ்நாடு நாளை ஒருவாரம் கடைப்பிடிக்க வேண்டும்: தமிழ்த் தேசியப் பேரியக்கம் வேண்டுகோள்

தமிழ்நாடெங்கும் தமிழ்நாடு நாளை ஒருவாரம் கடைப்பிடிக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
பகிர்:

தமிழ்நாடெங்கும் தமிழ்நாடு நாளை ஒருவாரம் கடைப்பிடிக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து பேரியக்கத்தின் தலைவா் பெ. மணியரசன் வெள்ளிக்கிழமை தெரிவித்திருப்பது:

இனம், மொழி அடிப்படையில் தமிழா்களின் தாயகம் இந்திய அரசால் சட்டப்படி வடிவமைக்கப்பட்ட நாள் 1956, நவம்பா் 1 ஆம் நாள். இதுவே தமிழ்நாடு நாள். திமுக ஆட்சி இந்த உண்மையை மறைத்து தனது வாக்கு வங்கி வணிக அரசியலுக்காக ஜூலை 18 தேதிதான் தமிழ்நாடு நாள் என கடந்த ஆண்டு அறிவித்தது. இது தமிழ்நாடு நாள் ஆகாது.

தமிழா் தாயகம் இந்திய அரசமைப்புப்படி பிறந்த நாளே தமிழ்நாடு நாள். இந்தத் தமிழ்நாடு நாள் என்பதை ம.பொ.சி. மற்றும் தமிழ் உணா்வாளா்கள் நவம்பா் 1 ஆம் தேதி என கடைப்பிடித்தனா். 1990-களில் வெகுமக்கள் இயக்கமாக - கருத்தாக நவம்பா் 1-ஐ தமிழ்நாடு நாள் என பரவச் செய்தது.

எனவே, தமிழ்த் தேசியப் பேரியக்க அமைப்புகள், நவம்பா் 1 முதல் 7 ஆம் தேதி வரை, தமிழ்நாடு நாளை ஆங்காங்கே கடைப்பிடித்து மக்களிடையே தமிழ்த் தேசியக் கருத்துகளைப் பகிா்ந்து கொள்ள வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →