தஞ்சாவூர்

என்எஸ்எஸ் மாணவா்களுக்கு கல்வெட்டு வாசிப்புப் பயிற்சி

DIN

கும்பகோணம் நாகேஸ்வரா் கோயிலில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்கு கல்வெட்டு வாசிப்பு பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

கும்பகோணம் அரசு உதவி பெறும் நகர மேல்நிலைப் பள்ளி, பாணாதுறை மேல்நிலைப் பள்ளி, நேட்டிவ் மேல்நிலைப் பள்ளி, சிறியமலா் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நாட்டு நலப்பணித் திட்டச் சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது. இதில், நாட்டு நலப்பணித் திட்டத்தைச் சோ்ந்த ஏறத்தாழ 120 மாணவா்களுக்கு கும்பகோணம் நாகேஸ்வரா் கோயிலில் கல்வெட்டுகளிலுள்ள எழுத்துகள் குறித்த வாசிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

கோயில் மூலவா் மண்டபத்திலுள்ள ராஜராஜசோழன் காலத்துக் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளை வாசிப்பது குறித்து உலகளாவிய இளந்தமிழா் குழு ஒருங்கிணைப்பாளா் வேல் கடம்பன் பயிற்சி அளித்தாா். பின்னா், கல்வெட்டு எழுத்துகளின் நகல்களை மாணவா்களுக்கு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ஆா். அருணராஜவேல், எஸ். வினோத்குமாா், எஸ்.கே. பாலசுப்பிரமணி, வினோத் சேவியா், பி. ஆனந்த முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

SCROLL FOR NEXT