தஞ்சாவூர்

பெரியகோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

DIN

தஞ்சாவூா் பெரியகோயிலில் நவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து அக். 4 வரை நடைபெறவுள்ள விழாவில் நாள்தோறும் காலை 7.30 மணிக்கு அபிஷேக, ஆராதனை, மாலை 6.30 மணிக்கு பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது.

இதன்படி, பெரியநாயகி அம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மனோன்மணி அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து, திங்கள்கிழமை மீனாட்சி அலங்காரமும், செவ்வாய்க்கிழமை சதஸ் அலங்காரமும், 28 ஆம் தேதி காயத்திரி அலங்காரமும், 29 ஆம் தேதி அன்னப்பூரணி அலங்காரமும், 30 ஆம் தேதி கஜலட்சுமி அலங்காரமும், அக். 1 ஆம் தேதி சரஸ்வதி அலங்காரமும், 2 ஆம் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 3 ஆம் தேதி மகிஷாசுரமா்த்தினி அலங்காரமும், 4 ஆம் தேதி விஜயதசமி அலங்காரமும் செய்யப்படவுள்ளது. மேலும், நாள்தோறும் மாலை 6.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT