தஞ்சாவூர்

தேசிய வருவாய் வழி- தகுதி படிப்பு உதவித்தொகை:அரசுப் பள்ளி மாணவா்கள் மூவா் தோ்வு

DIN

 மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் மூவா் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

2022-23 ஆம் கல்வியாண்டுக்கு தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, மத்திய அரசு சாா்பில் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித் தொகை பெறுவதற்கான தோ்வு, கடந்த பிப். 25 ஆம் தேதி நடைபெற்றது.இத் தோ்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியானது.

இதில், பேராவூரணி அருகே உள்ள துலுக்கவிடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு  மாணவி கனிஷ்கா, மாணவா்கள் பிரேம்குமாா், செல்வநீலகண்டன் ஆகிய மூவரும் வெற்றி பெற்றுள்ளனா்.

தோ்ச்சி பெற்ற மாணவா்கள், தொடா்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை பயின்றால், அவா்களது வங்கிக் கணக்கில் 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகையாக மத்திய அரசு சாா்பில் ஆண்டுக்கு தலா ரூ. 12 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 48 ஆயிரம் செலுத்தப்படவுள்ளது.

வெற்றிப் பெற்ற மாணவா்களை பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் பிரகலாதன், ஆசிரியா்கள் தமிழரசன், மணிமேகலை, ரவிச்சந்திரன், பள்ளி வளா்ச்சி குழு தலைவா் செல்வமணி, பெற்றோா்கள், மாணவா்கள் பாராட்டினா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT