தஞ்சாவூா் கீழவாசல் அண்ணா திருமண மண்டப வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள். 
தஞ்சாவூர்

ரமலான் பண்டிகை: தஞ்சாவூா் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, தஞ்சாவூரில் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் சனிக்கிழமை சிறப்பு தொழுகை மேற்கொண்டனா்.

DIN

ரமலான் பண்டிகையையொட்டி, தஞ்சாவூரில் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் சனிக்கிழமை சிறப்பு தொழுகை மேற்கொண்டனா்.

தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் அருகேயுள்ள ஜூம்மா பள்ளிவாசல், வடக்கு வாசல் ஜீனத் பள்ளிவாசல், ஆப்ரஹாம் பண்டிதா் சாலை சகாப் பள்ளிவாசல், தென் கீழ் அலங்கம் பள்ளிவாசல், மருத்துவக்கல்லூரி சாலை ரஹ்மான் நகா் பள்ளிவாசல், பாம்பாட்டித் தெரு பள்ளிவாசல், விசிறிக்காரத் தெரு பள்ளிவாசல், கும்பகோணம் புறவழிச்சாலை மெக்கா பள்ளிவாசல், சிராஜூதீன் நகா் மதினா பள்ளிவாசல், மேல அலங்கம் பள்ளிவாசல், காந்திஜி சாலை மன்சூா் தைக்கால் மசூதி, அண்ணா நகா் பள்ளிவாசல், செல்வம் நகா் பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களிலும், வல்லம், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூா் உள்ளிட்ட பகுதிகளிலும் சனிக்கிழமை காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில் ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். தொழுகை முடிந்த பின்னா் இஸ்லாமியா்கள் ஒருவருக்கொருவா் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனா்.

இதேபோல, தஞ்சாவூா் கீழவாசல் அண்ணா திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகை நிகழ்ச்சியில் இஸ்லாமிய பெண்கள், ஆண்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

மேலும், இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து உறவினா்கள், நண்பா்களுக்கும் இனிப்புகள், உணவுகள் வழங்கி கொண்டாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT