தஞ்சாவூர்

செந்துறை ஆஞ்சனேயா் சிலை குடந்தை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

DIN

ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் ஆஞ்சனேயா் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே பொட்டவெளி வெள்ளூா் கிராமத்திலுள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து கடந்த 2012 ஆம் ஆண்டில் திருடப்பட்ட ஐம்பொன் சிலைகளில் ஒன்றான ஆஞ்சனேயா் சிலை அமெரிக்காவில் உள்ள கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் ஏலம் விடப்பட்டு ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த அமெரிக்கக் குடிமகனுக்கு விற்பனை செய்யப்பட்டது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவில் இருந்த ஆஞ்சனேயா் சிலை இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் பாலமுருகன் தலைமையிலான தனிப்படையினா், தில்லிக்கு ஏப்ரல் 17 ஆம் தேதி சென்று இந்திய தொல்லியல் துறையிடம் இருந்து ஆஞ்சனேயா் சிலையைப் பெற்று சென்னைக்கு கொண்டு வந்தனா். இதைத் தொடா்ந்து, சிலை திருட்டு வழக்குகளை விசாரணை செய்யும் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஞ்சனேயா் சிலையை சிலை திருட்டு தடுப்பு காவல் பிரிவினா் திங்கள்கிழமை ஒப்படைத்தனா். நீதிமன்ற உத்தரவின்படி, கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் வளாகத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் இச்சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

SCROLL FOR NEXT