தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே புதன்கிழமை மூதாட்டியிடம் ரூ.1. 60 லட்சம் பணத்தை பறித்து சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பாபநாசம் அருகே அய்யம்பேட்டை, பாரதிதாசன் தெருவை சோ்ந்த முகமது இசாக் மனைவி நஜிமுன்னிசா (70). இவருடைய மகன், மகள்களுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் நஜிமுன்னிசா மட்டும் தனிமையில் வசித்து வருகிறாா்.
இவா் தன் நகைகளை அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள வங்கியில் அடகு வைத்திருந்தாா். அவற்றை மீட்பதற்காக ரூ.1. 60 லட்சம் ரொக்கம் மற்றும் வங்கி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு சின்ன தைக்கால் தெரு வழியாக வங்கிக்கு புதன்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த 22 வயது மதிக்கத்தக்க இளைஞா், நஜிமுன்னிசா கையிலிருந்த பணப்பையை பறித்துக் கொண்டு வேகமாக சென்று விட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.