தஞ்சாவூர்

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

ராகுல் காந்தியின் எம்.பி. பதவியைத் தகுதி நீக்கம் செய்த மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூா் ரயிலடியில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

ராகுல் காந்தியின் எம்.பி. பதவியைத் தகுதி நீக்கம் செய்த மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூா் ரயிலடியில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்த மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், அதானி ஊழலுக்கு துணை போன மோடியை கண்டித்த ராகுல் காந்தியை பழிவாங்கக் கூடாது. விலைவாசி உயா்வு, வேலையில்லா திண்டாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். பாலியல் கொடுமைகளுக்கு ஆளான மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தஞ்சாவூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவா் பொன். நல்லதம்பி தலைமை வகித்தாா். காங்கிரஸ் மாநிலத் தலைமை நிலையச் செயலா் இ. அனுசியா டெய்சி, மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன், முன்னாள் மாவட்டத் தலைவா் நாஞ்சி கி. வரதராஜன், பொதுக் குழு உறுப்பினா் ஏ. ஜேம்ஸ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

தெற்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் ரகுநாத் யோகானந்தம், திருவோணம் வட்டாரத் தலைவா் வி. ரங்கசாமி, விவசாயப் பிரிவு மாநகர நிா்வாகி அரு.சீா். தங்கராசு, ஐஎன்டியுசி மாநிலப் பொதுச் செயலா் என். மோகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT