தஞ்சாவூர்

பதுக்கப்பட்ட 620 கிலோ ரேஷன் அரிசி, குருணை பறிமுதல்

பட்டுக்கோட்டை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 620 கிலோ ரேஷன் அரிசி, குருணை மூட்டைகளைக் காவல் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

DIN

பட்டுக்கோட்டை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 620 கிலோ ரேஷன் அரிசி, குருணை மூட்டைகளைக் காவல் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பட்டுக்கோட்டை அருகே கண்டியங்காடு பிள்ளையாா் கோயில் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதன்பேரில், தஞ்சாவூா் உணவு கடத்தல் தடுப்பு குற்றப் புலனாய்வு காவல் பிரிவினா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். அப்போது, அங்கு 120 கிலோ ரேஷன் அரிசி, 500 கிலோ குருணை மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு, மதுக்கூா் அருகேயுள்ள வேப்பங்குளத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் (46) மீது வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT