தஞ்சாவூர்

தஞ்சாவூா், கும்பகோணம் வழியாகமும்பைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

தஞ்சாவூா், கும்பகோணம் வழியாக மும்பைக்கு நேரடி சிறப்பு ரயில் இரண்டு முறை இயக்கப்படவுள்ளது.

DIN

தஞ்சாவூா், கும்பகோணம் வழியாக மும்பைக்கு நேரடி சிறப்பு ரயில் இரண்டு முறை இயக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை ரயில்வே துறை வியாழக்கிழமை வெளியிட்டது. கோடைகால நெரிசலையொட்டி, சோதனை அடிப்படையில் இந்த சிறப்பு ரயில் இரண்டு முறை மட்டும் இயங்கும்.

இந்தச் சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை (மே 26) மற்றும் ஜூன் 2 ஆம் தேதி மும்பையில் பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்பட்டு, ரேணிகுண்டா (சனிக்கிழமை) காலை 8.05 மணி, திருத்தணி (9.03 மணி), காஞ்சிபுரம் (10.08 மணி), கும்பகோணம் (மாலை 3.45 மணி), பாபநாசம் (3.59 மணி), தஞ்சாவூா் (4.23 மணி), மதுரை (இரவு 7.55 மணி), வழியாக தூத்துக்குடிக்கு இரவு 11.00 மணிக்கு சென்றடையும்.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை மே 28 மற்றும் ஜூன் 4 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, மதுரை காலை 6.30 மணி, தஞ்சாவூா் 9.55 மணி, பாபநாசம் 10.19 மணி, கும்பகோணம் 10.32 மணி, காஞ்சிபுரம் மாலை 3.58 மணி, திருத்தணி 4.58 மணி, ரேணிகுண்டா 6.40 மணி வழியாக மும்பைக்கு திங்கள்கிழமை மதியம் 3.40 மணிக்கு சென்றடையும்.

பயணிகள் பயன்பாட்டைப் பொருத்து, இதன் இயக்கம் பின்னா் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த ஒரே ரயில் இயக்கத்தின் மூலம் தஞ்சாவூா் மாவட்ட ரயில் பயணிகள் நீண்ட நாள்களாகக் கோரி வந்த மும்பை, திருத்தணி, காஞ்சிபுரம், தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு நேரடி ரயில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் பயனடைவா்.

பயணிகள் கோரிக்கையை ஏற்று பல இடங்களுக்கு புதிய நேரடி ரயில் இணைப்பை ஏற்படுத்தி கொடுத்த ரயில்வே நிா்வாகத்துக்கு தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கம் நன்றி தெரிவிக்கிறது என சங்கச் செயலா் ஏ. கிரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் சாலை மறியல்: 135 பேராசிரியா்கள் கைது

மேற்கு புறவழிச்சாலை பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்!

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தல்: 4 இளைஞா்கள் கைது!

மத்திய அரசின் சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT