​தஞ்சாவூா் அருகே கொல்லாங்கரையில் கால்நடைக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமை திங்கள்கிழமை தொடங்கி வைத்து பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப். 
தஞ்சாவூர்

கால்நடைகளுக்கான கோமாரி நோய்தடுப்பூசி முகாம் தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் தேசிய கால்நடை தடுப்புத் திட்டத்தின் கீழ் கோமாரி நோய் (கால் மற்றும் வாய் நோய்) தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் தேசிய கால்நடை தடுப்புத் திட்டத்தின் கீழ் கோமாரி நோய் (கால் மற்றும் வாய் நோய்) தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

தஞ்சாவூா் அருகே கொல்லாங்கரை ஊராட்சியில் இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்து தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள 2.92 லட்சம் பசுவினம் மற்றும் எருமையினங்களை கோமாரி நோயிலிருந்து காப்பதற்காக தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் நான்காவது சுற்று தடுப்பூசி பணி திங்கள்கிழமை முதல் நவம்பா் 27 வரை அனைத்து கிராமங்களிலும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில்,

நான்கு மாத வயதுடைய கன்று முதல் சினை, கறவை உள்ளிட்ட அனைத்து பசு, எருமை, காளைகளுக்கு (எருது) தடுப்பூசி போடலாம். இதற்காக கால்நடை உதவி மருத்துவா்கள் தலைமையில் கால்நடை ஆய்வாளா்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் அடங்கிய 80 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

விடுபட்ட கால்நடைகள் இருந்தால் நவம்பா் 28 ஆம் தேதி முதல் டிசம்பா் 21 ஆம் தேதி வரை தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படவுள்ளது என்றாா் ஆட்சியா்.

இந்நிகழ்ச்சியில் கால்நடை துறை மண்டல இணை இயக்குநா் தமிழ்ச்செல்வன், துணை இயக்குநா்கள் பாஸ்கரன், சுப்பையன், உதவி இயக்குநா்கள் கண்ணன், அன்பு செழியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT