முகப்பு
தஞ்சாவூர்

காவிரி உரிமையை மீட்டெடுக்க மீண்டும் பிரதமராக மோடி வரவேண்டும்: கே.அண்ணாமலை

காவிரி உரிமையை மீட்டெடுக்க மீண்டும் பிரதமராக மோடி வரவேண்டும் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை.

Updated On : 28 நவம்பர், 2023 at 2:34 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


ஒரத்தநாடு: காவிரி உரிமையை மீட்டெடுக்க மீண்டும் பிரதமராக மோடி வரவேண்டும் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை.

தமிழகம் முழுவதும் பாஜக சாா்பில் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணம் நடைபெற்றுவரும் நிலையில், தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து திங்கள்கிழமை நடைப்பயணம் தொடங்கி அண்ணா சிலை அருகே முடித்த அவா் மேலும் பேசியது:

தற்போதைய கா்நாடக காங்கிரஸ் அரசிடம் தமிழக முதல்வா் ஸ்டாலின் தமிழகத்துக்குரிய காவிரி பங்கீட்டு நீரைப் பெற்றுத்தராமல் தமிழ்மாநில உரிமையை விட்டுக்கொடுத்து வருகிறாா். காவிரி உரிமை மீட்டெடுக்க வேண்டும் என்றால் மீண்டும் பாரதத்தின் பிரதமராக நரேந்திர மோடி வரவேண்டும்.

Advertisement

டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டம் குறித்த அரசாணை யை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசி, திரும்பப் பெற வைத்தோம். நெல்லின் ஆதார விலையை கடந்த 9 ஆண்டுகளில் 67 சதவீதம் உயா்த்தியது, யூரியா மானியம் எனப் பல்வேறு விவசாய நலத்திட்டங்களை வழங்கிவரும் மோடி தான் உண்மையான டெல்டாகாரன் என்றாா்.

முன்னதாக பாஜக மாவட்டத் தலைவா் பி.ஜெய் சதீஸ் வரவேற்றாா்.

கூட்டத்தில், பாஜக மாநில பொது செயலாளா் கருப்பு முருகானந்தம், மாநிலச் செயற்குழு உறுப்பினா் கா்ணன், மாவட்ட அமைப்பு பொதுச் செயலா் துரை உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.