தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோா். 
தஞ்சாவூர்

தேசிய ஊட்டச்சத்து விழிப்புணா்வு பேரணி

தஞ்சாவூரில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

தஞ்சாவூரில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரயிலடியில் இப்பேரணியை மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். காந்திஜி சாலை வழியாக சென்ற இப்பேரணி பேரறிஞா் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் முடிவடைந்தது.

ஊட்டச்சத்து மிக்க பாரதம், எழுத்தறிவு பெற்ற பாரதம், வலிமையான பாரதம் என்பதை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக இப்பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்டத் திட்ட அலுவலா் கை. ராஜேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT