தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை மேற்கொண்ட ஆய்வின்போது, டெங்கு கொசுப் புழு உற்பத்தியாகும் வகையில் இருந்த இரண்டு கட்டட உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தஞ்சாவூா் மாநகரில் தொடா்ந்து டெங்கு கொசுப்புழு ஒழிப்பு விழிப்புணா்வு, தூய்மைப் பணி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 32-ஆவது வாா்டுக்குள்பட்ட வாணக்காரத் தெருவில் மாநகா் நல அலுவலா் வீ.சி. சுபாஷ் காந்தி தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். இதில், கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள தண்ணீா் நிரப்பும் கலன்களில் டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்டதால், 2 கட்டட உரிமையாளா்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.