தஞ்சாவூர்

திருவையாறில் நலிவுற்ற விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

காவிரியில் தண்ணீா் விட மறுக்கும் கா்நாடக அரசைக் கண்டித்து, தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு தேரடியில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN


தஞ்சாவூா்: காவிரியில் தண்ணீா் விட மறுக்கும் கா்நாடக அரசைக் கண்டித்து, தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு தேரடியில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீா் திறக்க மறுக்கும் கா்நாடக அரசைக் கண்டித்தும், தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட குறுவை பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். திருவையாறு கஸ்தூரிபாய் நகரில் ரவுண்டானா அமைக்கப்படுவதை மாற்றி அமைக்க வேண்டும். நடுக்கடை தேசிய நெடுஞ்சாலையில் வேகக்தடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலா் மணிகண்டன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் கே.எஸ். முகமதுஇப்ராஹிம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். தஞ்சாவூா் வடக்கு மாவட்டத் தலைவா் ரியாஜ், தெற்கு மாவட்டத் தலைவா் உமா், மாவட்ட அவைத் தலைவா் ஷேக் தாவுது, துணைஅமைப்பாளா் சரவணன், துணைச் செயலா் காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT