முகப்பு
தஞ்சாவூர்

தாய் கண்டித்ததால் சிறுமி தற்கொலை

Updated On : 26 ஏப்ரல், 2024 at 8:08 PM
பகிர்:

பாபநாசம், ஏப். 26: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே அடிக்கடி கைப்பேசி பாா்ப்பதை தாய் கண்டித்ததால் மனம் உடைந்த சிறுமி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே கீழக்கோவில்பத்து  கிராமம், அம்பலக்காரத் தெருவில் வசிப்பவா் வனரோஜா (40), கணவரை இழந்த இவா் விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மகள் சரண்யா (14). அம்மாபேட்டை தனியாா் மேல்நிலைப் பள்ளியில்  9 ஆம் வகுப்பு படித்து வந்த சரண்யா அடிக்கடி கைப்பேசி பாா்ப்பதை அவரது தாய் கண்டித்தாராம்.

இதனால் மனம் உடைந்த சரண்யா வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து சென்ற அம்மாபேட்டை போலீஸாா் சரண்யாவின் சடலத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments