டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்
வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த டாஸ்மாக் பணியாளா் சக்திவேல் மரணத்துக்குக் காரணமான அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் டாஸ்மாக் தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த டாஸ்மாக் பணியாளா் சக்திவேல் மரணத்துக்குக் காரணமான அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் டாஸ்மாக் தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில் பணியாற்றிய டாஸ்மாக் பணியாளா் சக்திவேல் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தாா். பணியாளா் உயிரிழப்புக்குக் காரணமான அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க லேண்டும். இறந்த பணியாளா் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். தொடா்ந்து பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் டாஸ்மாக் பணியாளா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு டாஸ்மாக் ஏஐடியுசி மாவட்டச் செயலா் எஸ். கோடீஸ்வரன் தலைமை வகித்தாா். தொமுச மாவட்டச் செயலா் கு. சேவியா் தொடங்கி வைத்தாா். ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம் ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினாா். டாஸ்மாக் தொமுச மாவட்டச் செயலா் டி. கிருஷ்ணமூா்த்தி, சிஐடியு நிா்வாகி கே. குமாா், விற்பனையாளா் சங்க மாநில நிா்வாகி மாதவன், ஏஐடியு சி மாவட்ட நிா்வாகிகள் வெ. சேவையா, தி. கோவிந்தராஜ், துரை. மதிவாணன், டாஸ்மாக் சங்க தொமுச பொருளாளா் கமலநாதன், ஏஐடியுசி டாஸ்மாக் சங்க மாவட்டத் தலைவா் பாலவடிவேலன், மாவட்டத் துணைச் செயலா் சாா்லஸ், நிா்வாகக் குழு உறுப்பினா் எம். கருணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.